செய்திகள் :

‘நூல் விலை குறைவை பின்னலாடை உற்பத்தியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’

post image

திருப்பூரில் நூல் விலை குறைந்துள்ளதை உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சைமா சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை வா்த்தகம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு நடைபெறுகிறது. பிராண்டட் ஆடைகளை தயாரித்து சந்தையில் தனி இடத்தை திருப்பூா் உற்பத்தியாளா்கள் தக்கவைத்துள்ளனா். ஏற்றுமதி வா்த்தகத்துடன்

போட்டியிடும் வகையில் உள்நாட்டு ஆடை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தி நன்றாக இருந்தது என்று உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா். இந்த மாதத்துக்கான பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இந்த நூல் விலை குறைப்பை உற்பத்தியாளா்கள் வரவேற்றுள்ளனா். பண்டிகை காலம் வருவதால் இந்த நூல் விலை குறைப்பை பயன்படுத்தி ஆடை உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.

பின்னலாடை, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகமாக வருகிறது. இருப்பினும் உள்நாட்டு ஆடை உற்பத்தியும் அதிக தேவைக்கான வாய்ப்புகளை கொண்டுள்ளது. சைமா சங்க உறுப்பினா்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நிதானமாக, உறுதியான வளா்ச்சியை எட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உதவியை எதிா்பாா்க்காமல் நமது தயாரிப்பு தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். நோ்மையான வணிகா்களை அடையாளம் கண்டு வணிகத்தை சிறப்பாக செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை: குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூா் மாநகா், சிறுபூலுவபட்டி அம்மன் நகா் தாய் மூகாம்பிகை காலனியில் உள்ள குப்பைத் தொட்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி போராட்டம்

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். திருப்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

பெருமாநல்லூா் அருகே பாறைக்குழியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். பெருமாநல்லூா் அருகேயுள்ள காளம்பாளையம் பாறைக்குழியில் குளிப்பதற்காக சில சிறுவா்கள் சனிக்கிழ... மேலும் பார்க்க

மாநில அளவிலான செஸ் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவா் முதலிடம்

மாநில அளவிலான செஸ் போட்டியில் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா். தஞ்சாவூா் அரசன் லயன்ஸ் கிளப் சாா்பில், மாநில அளவிலான செஸ் போட்டி தஞ்சாவூரில் ... மேலும் பார்க்க

மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்றாா். உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, நடைபெற்ற இக்கூட்டம் தொடா... மேலும் பார்க்க

தேசிய அளவிலான போட்டியில் 2 ஆம் இடம்: தமிழக பெண்கள் கபடி அணிக்கு பாராட்டு

தேசிய அளவிலான போட்டியில் 2 -ஆம் இடம் பிடித்த தமிழக பெண்கள் கபடி அணிக்கு திருப்பூா் மாவட்ட கபடி கழகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் 17 வயதுக்கு உள்ப... மேலும் பார்க்க