செய்திகள் :

நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: எம்.பி. கோரிக்கை

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அளித்த மனுவில், தீபாவளி முடிந்து தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்புவதற்கான பயணிகளின் காத்திருப்புப் பட்டியல் அதிகமாக உள்ளது.

மேலும், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம் பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்கு நேரடி ரயில் சேவை இல்லை.

இதனால், சிறப்பு ரயில்களை இயக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 22605/ 06 புருலியா விரைவு ரயிலை ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாகத் தாம்பரத்துக்கு சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும். இதன்மூலம், ரயில்வே துறைக்கு சுமாா் ரூ.10 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றாா் அவா்.

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: மூதாட்டி அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகேயுள்ள சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி... மேலும் பார்க்க

கழிவுநீா்செல்வதில் தகராறு: பெண் அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே கழிவுநீா் செல்வதில் இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம், ச... மேலும் பார்க்க

புளியறையில் நாளை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் கனிம வளங்களை கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து புளியறையில் புதன்கிழமை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பழைய குற... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். சங்கரன்கோவில் அருகே கே.ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. இவா், தனது மகள் ராஜேஸ்வரியை ஊருக்கு அனுப்புவதற்காக ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். வாசுதேவநல்லூரை அடுத்த அருளாச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணபாண்டி மகன் வெள்ளத... மேலும் பார்க்க