நெல்லை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்
திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மைய அறிவிப்பின் படி தென்தமிழகம், கன்னியாகுமரி கடல் பகுதி, மன்னாா்வளைகுடா கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீட்டா் முதல் 45 கி.மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.