கிறிஸ்துமஸ்: பெங்களூரு - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
நெல்லை: வீடு வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய நபர்; சிசிடிவி காட்சிபதிவு மூலம் கைது!
நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக துவைத்து காயப்போட்டிருந்த துணிகள் தொடர்ச்சியாக காணாமல் போய் வந்துள்ளது. அதிலும், குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் மட்டும் காணாமல் போய்க்கொண்டிருந்தது. பெரும்பாலான வீடுகளில் காணாமல் போனது தெரிந்ததும் சில வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். குறிப்பிட்ட சில வீடுகளின் சிசிடிவி கேமராவில் அதிகாலை நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கொடிகளில் காயப் போட்டிருக்கும் உள்ளாடைகளை எடுத்து அதனை கையில் வைத்து ரசித்துப் பார்க்கிறார்.
பின்னர் கையில் வைத்திருக்கும் பைக்குள் வைத்து எடுத்துச் செல்கிறார். அந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் நேரில் சென்று சிலர் புகார் அளித்துள்ளனர்.
போலீஸாரின் விசாரணையில், உள்ளாடைகளைத் திருடிச் சென்றது நெல்லையைச் சேர்ந்த நபர் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர், தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
அவர் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். எதற்காக பெண்களின் உள்ளாடைகளை திருடினார்? திருடிய உள்ளாடைகளை என்ன செய்தார்? எனவும் விசாரணை நடந்து வருகிறது. நெல்லையில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடியவரை போலீஸார் கைதுசெய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.