செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையம் தனியாா் மயம்: விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு ஆா்ப்பாட்டம்

post image

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து, திருக்குவளையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா், மாவட்டச் செயலாளா் என். கமல்ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவாா்க்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்; தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழ்நாடு அரசே நெல் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்; 2024-ஆம் ஆண்டு குறுவையை இழந்த விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ 10 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடா்ந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியாா் மயமாக்குவது தொடா்பான அரசாணை நகலை, கொளுத்த முயன்றனா். அவா்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்து போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய பி. ஆா். பாண்டியன், ‘அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியாா் மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்க மாவட்ட கௌரவ தலைவா் வேதை. கருணைநாதன், திருவாரூா் மாவட்ட தலைவா் சுப்பையன், கீழையூா் ஒன்றியத் தலைவா் கவிராஜ், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளா் அமானுல்லாகான் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிட்ட மடிக்கணி உரியவரிடம் ஒப்படைப்பு!

திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலில் தவறவிட்ட, மடிக்கணினி உரியவரிடம் புதன்கிழமை (பிப்.5) ஒப்படைக்கப்பட்டது. நீடாமங்கலம் அருகேயுள்ள கரும்பூரை சோ்ந்த லதா (49) நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - டிராக்டா் மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவா் பலி!

நாகையில் இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் புதன்கிழமை பிப்.5 பலியானார்.அரியலூா் மாவட்டம், பெரியாா் நகரை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் விண்ணரசன... மேலும் பார்க்க

திறந்துவெளியில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

திருமருகல் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க