செய்திகள் :

`நேற்று AAP அமைச்சர், இன்று பாஜக உறுப்பினர்' - விலகிய கைலாஷ் கெலாட்; கெஜ்ரிவால் ரியாக்சன் என்ன?

post image
நேற்று வரை ஆம் ஆத்மி அமைச்சராக இருந்த கைலாஷ் கெஹ்லோட், இன்று பா.ஜ.க-வில் இணைந்தார்.

ஆம் ஆத்மியின் மூத்த தலைவராகவும், டெல்லி அமைச்சராகவும் செயல்பட்டுவந்த கைலாஷ் கெலாட், அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவாலுக்கு நேற்று ராஜினாமா கடிதம் எழுதினார்.

கைலாஷ் கெலாட்

அந்தக் கடிதத்தில், ``ஆம் ஆத்மி மோசமான உட்கட்சி மோதல்களை எதிர்கொள்கிறது. மக்களுக்கான நம் அர்ப்பணிப்புகளை அரசியல் இலக்குகள் ஓவர்டேக் செய்துவிட்டது. இதனால் கட்சி முன்வைத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. கெஜ்ரிவால் பங்களா உள்ளிட்ட பல சர்ச்சைகள், ஆம் ஆத்மியை இன்னும் நம்பலாமா என்று மக்களிடையே கேள்வியெழுப்ப வைத்திருக்கிறது.

மேலும், மத்திய அரசுடன் சண்டையிடுவதிலேயே பெரும்பாலான நேரத்தை வீணடித்தால், டெல்லிக்கு உண்மையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, ஆம் ஆத்மியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து விலகுகிறேன்." என்று கைலாஷ் கெலாட் குறிப்பிட்டார். மேலும், அமைச்சர் குழுவிலிருந்து அவர் பதவியை ராஜினாமா செய்ததை முதல்வர் அதிஷி ஏற்றுக்கொண்டார்.

கைலாஷ் கெலாட் விலகிய அடுத்த சில மணிநேரங்களிலேயே, இவர் பா.ஜ.க-வில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியது. அதோடு, கடந்த சில மாதங்களாக இவர் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய மத்திய ஏஜென்சிகளின் அழுத்தத்தை எதிர்கொண்டதாக ஆம் ஆத்மி தரப்பிலிருந்து கூறப்பட்டது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் முன்னிலையில், கைலாஷ் கெலாட் இன்று பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

கெஜ்ரிவால்

அதைத்தொடர்ந்து ஊடகத்திடம் பேசிய கைலாஷ் கெலாட், ``டெல்லி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம் ஆத்மியில் சேர்ந்தேன். ஆனால், ஆம் ஆத்மியில் சேர்ந்ததற்கான நோக்கங்கள் என் கண் முன்னே சமரசம் செய்யப்பட்டு வருகிறது. இது என்னுடைய வார்த்தைகளாக இருக்கலாம், ஆனால் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் லட்சக்கணக்கான ஆம் ஆத்மியினரின் குரல் இருக்கிறது என்று உறுதியாகக் கூறுவேன்." என்றார்.

கைலாஷ் கெலாட்டின் இத்தகைய செயலுக்குத் தனது ரியாக்சனை வெளிப்படுத்தியிருக்கும் கெஜ்ரிவால், ``அவர் வெளியேறிவிட்டார், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம்' மகாராஷ்டிரா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மும்பை தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம்மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இத்தேர்தல் பல வளர்ச்சித்திட்டங்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறத... மேலும் பார்க்க

Sri lanka: இலங்கையின் புதிய பிரதமராகப் பதிவியேற்ற ஹரிணி அமரசூரிய! - யார் இவர்?

இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய... மேலும் பார்க்க

``யார் காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனாரோ, அவர் காலையே வாரிவிட்டவர்!'' - இபிஎஸ் -க்கு உதயநிதி பதிலடி

கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில் துணை முதலமைச்சரான... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு.!

தங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது என்று ஏற்கெனவே முல்லை நகர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சின்ன உடைப்பு கிராம மக்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளது மதுரையில் பரபரபை ஏற்பட... மேலும் பார்க்க

Seeman: ``இது ஒரு பெரிய குற்றமா?'' - நடிகை கஸ்தூரி கைதுக்கு சீமான் கண்டனம்!

நேற்றிரவு நடிகை கஸ்தூரி ஹைத்ராபாத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை தோற்கடிக்க, குடும்பத்தோடு பிரசாரத்தில் இறங்கிய சரத்பவார்..!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தல் பிரசாரம் நாளை முடிகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந... மேலும் பார்க்க