ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
‘நேஷனல் க்ரஷ்’ பட்டத்தினால் எந்தப் பயனுமில்லை: ரஷ்மிகா மந்தனா
நடிகை ரஷ்மிகா மந்தனா ‘நேஷனல் க்ரஷ்’ பட்டப்பெயரால் எந்தப் பயனுமில்லை எனக் கூறியுள்ளார்.
28 வயதாகும் நடிகை ரஷ்மிகா கீதா கோவிந்தம், சீதா ராமம், வாரிசு, அனிமல், புஷ்பா ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் முக்கியமான நடிகையாக மாறியுள்ளார்.
குறிப்பாக அனிமல், புஷ்பா 2 படங்கள் சேர்த்து 2,500 கோடிகள் வசுலித்து அசத்தியது. தற்போது ஹிந்தியில் சாவா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரஷ்மிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:
பட்டப் பெயர்கள் உதவுவதில்லை
சினிமா வாழ்க்கையில் பட்டப் பெயர்கள் உதவுவதில்லை. அது ரசிகர்களின் அன்பினால் கிடைப்பது. அவர்கள் எப்படி அழைக்க விரும்புகிறார்களோ அப்படி அழைப்பார்கள். அது வெறுமனே பெயர்கள் மட்டுமே.
நீங்கள் என்ன படம் எடுக்கிறீங்கள்? அது ரசிகர்களுக்கு எப்படி பிடிக்கிறதோ அதுதான் வெள்ளிக்கிழமை டிக்கெட்டாக மாறுகிறது. அதுதான் எனக்கு சிறப்பாக இருக்கிறது.
24 படங்களில் நடித்துள்ளேன். என்னைவிட அழகான பல கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஆனால், நான் என்னுடைய வழிகளில் செல்லுகிறேன்.
எனது ரசிகர்கள் / நலம் விரும்பிகளுடன் நான் நல்ல தொடர்பில் இருக்கிறேன். அதை எனது இதயத்துக்கு அருகில் வைத்துள்ளேன். அதை நம்பியே தொடர்ச்சியாக படங்களில் நடிக்கிறேன்.
ரசிகர்களுக்காக எதையும் செய்ய தயார்
உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் நான் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். இது கடினமாக இருக்கிறது.
ஆனால், அதேசமயம் எனக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும் அன்புக்கு நான் எனது தூக்கத்துக்கு பை பை சொல்ல வேண்டியுள்ளது.
ரசிகர்களின் அன்பை நான் எப்போதும் முதன்மையானதாக கருதுகிறேன். ஒரே நேரத்தில் 2,3 படங்களில் நடிக்கிறேன். ரசிகர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.