அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
திருமண தேதியை அறிவித்த அமீர் - பாவ்னி ஜோடி!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அமீர் - பாவ்னி ஜோடி தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.
சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவர் பிரஜுனுடன் நடித்த சின்ன தம்பி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்றார். அப்போது இந்நிகழ்ச்சியின் பங்கேற்ற சக போட்டியாளரான நடன கலைஞர் அமீருடன் நட்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ‘காந்தா’ புதிய போஸ்டர்!
இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது பாவ்னியை ஒருதலைபட்சமாக அமீர் காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் அமீரின் காதலை ஏற்காத பாவ்னி, வெளியே வந்தவுடன் இவர்களின் நட்பு காதலாக மாறியது.
தொடர்ந்து, 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்தனர். சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், விடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், காதல் நாளான நேற்று(பிப். 14) தங்களது திருமண தேதியை அறிவித்தனர். வரும் ஏப். 20 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.