உ.வே.சா. பிறந்த நாள் விழா: உத்தமதானபுரத்தில் ஆட்சியா் மரியாதை
வசூலில் கெத்து காட்டிய குடும்பஸ்தன்!
மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ரூ. 25 கோடி வரை வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமாக்காரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய படம்தான் குடும்பஸ்தன்.
மணிகண்டன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வைஷாக் இசையமைத்துள்ளார்.
கடந்த ஜன. 24 அன்று வெளியான இந்தப் படம் மிடில் கிளாஸ் நாயகனின் வாழ்க்கையை நகைச்சுவையாகக் கூறி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | மம்மூட்டியின் புதிய பட அறிவிப்பு!
படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் குடும்பஸ்தன் திரைப்படம் மொத்தமாக ரூ. 25 கோடி வரை வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிகண்டனுக்கு குட் நைட், லவ்வர் வரிசையில் மூன்றாவது வெற்றிப் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
குடும்பஸ்தன் திரைப்படம் ஓடிடியில் வருகிற பிப். 28 அன்று வெளியாகவுள்ளது.