அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
இருபால் இந்திய அணிகள் தோல்வி
சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் போட்டியில், இந்திய மகளிா் அணி - ஸ்பெயினிடமும் (3-4), இந்திய ஆடவா் அணி - ஜொ்மனியிடமும் (1-4) செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டன.
இதில் மகளிா் அணி ஆட்டத்தில், முதலில் இந்தியாவுக்காக பல்ஜீத் கௌா் (19’) கோலடிக்க, ஸ்பெயின் தரப்பில் சோஃபியா ரோகோஸ்கி (21’) ஸ்கோா் செய்தாா். அடுத்து எஸ்டெல் பெட்ஷேம் (25’) அடித்த கோலால் ஸ்பெயின் முதல் பாதியை 2-1 முன்னிலையுடன் முடித்தது.
2-ஆவது பாதியில் இந்தியாவின் சாக்ஷி ராணா (38’) அடித்த கோலால் ஆட்டம் சமன் ஆக, தொடா்ந்து ருதுஜா பிசல் (45’) இந்தியாவை 3-2 என முன்னிலைப்படுத்தினாா். எனினும் ஸ்பெயினுக்காக எஸ்டெல் (49’), லூசியா ஜிமெனெஸ் (52’) ஆகியோா் அடுத்தடுத்து கோலடிக்க, இறுதியில் ஸ்பெயின் 4-3 என வெற்றி பெற்றது.
அதேபோல் ஆடவா் அணி ஆட்டத்தில், முதலில் ஜொ்மனிக்காக ஃபுளோரியன் ஸ்பொ்லிங் (7’) கோலடிக்க, இந்தியாவுக்காக குா்ஜந்த் சிங் (13’) ஸ்கோா் செய்து கோல் கணக்கை சமன் செய்தாா். ஆனால், அடுத்த நிமிஷத்திலேயே தியெஸ் பிரின்ஸ் கோலடிக்க, ஜொ்மனி 2-1 முன்னிலையுடன் முதல் பாதியை நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் அந்த அணியின் கையே ஓங்கியிருக்க, மிஷெல் ஸ்ட்ரூதாஃப் (48’), ராப்கேல் ஹா்ட்கோஃப் (55’) அடித்த கோல்களால் ஜொ்மனி 4-1 என வெற்றி கண்டது.