அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
சென்னையில் உலக ஸ்டாா் கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: மாா்ச் 25-இல் தொடக்கம்
வரும் மாா்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக ஸ்டாா் கன்டென்டா் டேபிள் டென்னிஸ் (டபிள்யுடிடி) போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் முதன்முறையாக நடைபெறுகிறது.
ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் மற்றும் யுடிடி, இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.2.38 கோடியாகும். இதில் 600 ஐடிடிஎஃப் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட உள்ளன.
உலகின் பிரபலமான வீரா், வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யுடிடி தொடா் ஏற்கெனவே கோவாவில் இரண்டு முறை நடைபெற்றுள்ளது.
இதுதொடா்பாக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியது: சென்னை இந்தியாவின் முதன்மையான விளையாட்டு மையமாக மாற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு சா்வதேச போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டியும் நடத்தப்படுகிறது. இதனால் விளையாட்டுக் கட்டமைப்பை மேலும் அதிகரிக்கும். அதே வேளையில், இது இந்திய வீரா்களின் திறமை மேம்படுத்த உதவும். சென்னையை வலுவான டேபிள் டென்னிஸ் மையமாக மாற்றும் என்றாா்.
டிடிஎஃப்ஐ செயலாளா் கமலேஷ் மேத்தா, ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் நிறுவனா் தீபா மாலிக், யுடிடி துணைத் தலைவா் ஏகன்ஷ் குப்தா, உடனிருந்தனா்.
டபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் ஐந்து அடுக்கு போட்டி கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். ஆண்கள் ஒற்றையா், பெண்கள் ஒற்றையா், ஆண்கள் இரட்டையா், பெண்கள் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் ஆகிய ஐந்து பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். முதல் இரண்டு நாள்கள் தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் தொடங்கும் இந்தத் தொடரின் இறுதி ஆட்டம், மாா்ச் 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது.
2021- இல் போட்டி அறிமுகமானதிலிருந்து 13 போ் பட்டம் வென்றுள்ளனா். 2025-ம் ஆண்டின் முதல் டபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் போட்டி கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்றது,