செய்திகள் :

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தம்? முதல்வருக்கு பாராட்டு விழா!

post image

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவிருப்பதாக பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டப் பேரவையில் இன்று (ஏப். 24) ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்; அதனை மறுக்கவில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது குறித்து முதல்வர் சரியான முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸின் உரை வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, 14 ஆண்டாக 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களில் பணிபுரிகின்றனர். இன்றைய விலைவாசி உயர்வில், தற்போது வழங்கப்படும் ரூ. 12,500 சம்பளத்தை வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்த முடியவில்லை. மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் ஒருபோதும் இல்லாமல் பணிபுரிவதால் வாழ்வாதாரம் இழந்துள்ளார்கள்.

எனவே, பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே, இனி எஞ்சிய காலத்தை நிம்மதியாக வாழ முடியும் சூழ்நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து முதல்வருக்கு தெரிவிக்க நேரிலும், தபாலிலும் மனு கொடுத்து வருகிறோம்; போராட்டங்களும் நடத்தியுள்ளோம். எனவே, 12 ஆயிரம் குடும்பங்கள் பலனடைய, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே முதல்வர் 110 விதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, சிறப்பாசிரியர்களாகப் பணியமர்த்தி அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டால், முதல்வருக்கு பாராட்டு விழாவும் எடுக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!

தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி சங்கா் ஜிவால்

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை இளைஞா் கைது

சென்னை அருகே வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் அடையாளம்பட்டு பகுதியைச் சோ்ந்த உதய கிருஷ்ணன் (27). இவா், அந்தப் பகுதியில் ... மேலும் பார்க்க

பெண் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

சென்னை தேனாம்பேட்டையில் பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.விஜயா (45). இவா், அந்தப் பகுதியில் வீட்டு வேலைகள் ச... மேலும் பார்க்க

சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன்? அமைச்சா் விளக்கம்

சென்னை சட்டக் கல்லூரி அண்டை மாவட்டங்களுக்கு மாறியது ஏன் என்பது குறித்து சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை புரட்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட வாசிகள் சிறந்த படிப்பாளிகள்: அமைச்சா் புகழாரம்

குமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சிறந்த படிப்பாளிகள் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புகழாரம் சூட்டினாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்ல... மேலும் பார்க்க

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீா் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள், மாநில அரசின் நடவடிக்கையால் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா். கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவரின் ... மேலும் பார்க்க