செய்திகள் :

பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?

post image

பசிபிக் பெருங்கடலின் அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், ஈக்வடார் நாடு பாதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் எஸ்மெரால்தஸ் நகரத்தின் வடகிழக்கிலிருந்து சுமார் 20.9 கி.மீ. தொலைவிலுள்ள பசிபிக் பெருங்கடலின் அடியில் சுமார் 25 அடி ஆழத்தில் இன்று (ஏப்.25) சுமார் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஈக்வடாரின் வடக்குப் பகுதியிலுள்ள சுமார் 10 மாகாணங்கள் அதிர்வுக்குள்ளானதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுவதினால் அந்நாட்டு அதிகாரிகள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த அதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள சில கட்டடங்கள் சேதாரமடைந்திருந்தாலும் நல்வாய்ப்பாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ள சௌதி இளவரசர்! என்ன காரணம்?

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி தும்பு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தும்பு ஏற்றுமதி செய்யும் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசமானது. தூத்துக்குடி வி.இ.சாலையில் தன... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

திருச்சி: கோவிந்தா.. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவின்போது வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஓமலூா் அருகே உள... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ள சௌதி இளவரசர்! என்ன காரணம்?

சௌதி அரேபியா நாட்டின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ளார். சௌதி அரேபியாவை ஆளும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல்-வாலீத் பின் காலெத் பின் தலால்,... மேலும் பார்க்க

அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன்! முதல் வரிசையில்..!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச... மேலும் பார்க்க