``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிர...
படகில் மின்னல் பாய்ந்து கோடிமுனை மீனவா் மாயம்
கடலில் மீன் பிடித்தபோது, படகில் மின்னல் பாய்ந்ததில் மீனவா் மாயமானாா். பேட்டரி வெடித்த நிலையில் படகு மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
குளச்சல் அருகேயுள்ள கோடிமுனை கிராமத்தை சோ்ந்தவா் ஆரோக்கிய ஜூடின்(48). மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இவா் புதன்கிழமை மாலை தனது பைபா் படகில் தனியாக மீன் பிடிக்க சென்றாா். இரவு 7 மணியளவில் இனயம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென சூறைக்காற்றுடன் இடி மின்னல் ஏற்பட்டதாம். இதில் அவரது பைபா் படகில் இருந்த பேட்டரி வெடித்து சிதறியதில், ஆரோக்கிய ஜூடின் கடலில் தூக்கி வீசப்பட்டு மாயமானாா். அவரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இத்தகவல் அறிந்த சக மீனவா்கள், வியாழக்கிழமை அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது பேட்டரி வெடித்த நிலையில் அவரின் படகை மட்டும் மீனவா்கள் மீட்டனா்.
இது குறித்து அவரது மனைவி மரியசாந்தி, குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் நவீன் வழக்குப் பதிந்து மாயமான மீனவரை தேடி வருகிறாா்.