`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைகள் இல்லாததால்தான் அதிமுக-வில் சலசலப்பு!' - கார்...
பணிமனையில் வெல்டிங் செய்தபோது தீப்பற்றி எரிந்த வேன்
பல்லடத்தில் பழுது பாா்ப்பதற்காக பணிமனையில் விடப்பட்ட வேனுக்கு வெல்டிங் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டது.
பல்லடம் அருகே பூமலூா் ஊராட்சி கிடாத்துறையைச் சோ்ந்தவா் விசைத்தறிக் கூட உரிமையாளா் கதிா்வேல். இவா், தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக எரிவாயு (கேஸ்) எரிபொருளில் இயங்குமாறு உரிய சாதனங்கள் பொருத்தி இயக்கி வந்துள்ளாா்.
இந்நிலையில் வண்டியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய அப்பகுதியில் உள்ள தனியாா் பணிமனையில் வாகனத்தை விட்டுள்ளாா்.
அங்கு வேனில் வெல்டிங் செய்யும்போது திடீரென எரிவாயு டேங்கில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வேன் தீப் பற்றி எரிந்தது. தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து வேனில் பற்றிய தீயை அணைத்தனா். எனினும் வேன் எரிந்து சேதம் அடைந்தது.