செய்திகள் :

பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் பலி

post image

வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது, வெடிமருந்துகளை ஏற்றி வந்த வாகனத்தைக்கொண்டு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் பலியாகினர்.

பைகர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போதுதான் இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

இதுவரை பாகிஸ்தான் அரசு தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நவ.9 ஆம் தேதி, ராணுவ வீரர்களைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்!

இஸ்லாமாபாத்: இம்ரான் கான் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாரா? அல்லது அவர் எப்போது விடுவிக்கப்படுவார்? என்று அவரது பிடிஐ கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இன்று(நவ. 20) இம்ரான்... மேலும் பார்க்க

நியூசிலாந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு! 40,000 பேர் போராட்டம்! காரணம் என்ன?

நியூசிலாந்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, சுமார் 40,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1840 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும... மேலும் பார்க்க

அமெரிக்கா ராணுவ உதவியை நிறுத்தினால் தோல்வி நிச்சயம்! -உக்ரைன் அதிபர்

ரஷியாவின் ராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ளவும் பதிலடி கொடுக்கவும் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவியை செய்து வருகிறது. இதன்காரணமாகவே ரஷியாவை எதிர்த்து உக்ரைனால் இத்தனை நாள்கள் தாக்குப்பிடித்து போராட முடிக... மேலும் பார்க்க

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ரஷியா ஆயத்தம்? உக்ரைனில் போர்ப்பதற்றம் அதிகரிப்பு!

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ளது. ரஷிய படைகள் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து மு... மேலும் பார்க்க

ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து செவ்வாய்க்கிழமையுடன் 1,000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. சோவியத் யூனியன் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக உருவா... மேலும் பார்க்க

காஸா: நிவாரணப் பொருள்கள் கொள்ளை

காஸாவில் நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த சுமாா் 100 லாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரால் அங்கு கடுமையான உணவுப் ... மேலும் பார்க்க