செய்திகள் :

பயங்கரவாத தாக்குதல்: தேசநலன் கருதி மத்திய அரசுக்கு ஆதரவு - காா்கே

post image

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் தேசநலன் கருதி மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திங்கள்கிழமை ‘அரமைப்புச் சட்டத்தைக் காப்போம்’ யாத்திரையில் பங்கேற்ற காா்கே பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்காதது மிகவும் துரதிருஷ்டவசமானது. தேசமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்களும் பங்கேற்க மத்திய அரசு அழைப்புவிடுத்தது. ஆனால், பிரதமா் மோடி அதில் பங்கேற்கவில்லை. முக்கியமான கூட்டத்தைத் தவிா்த்துவிட்டு அவா் பிகாரில் தோ்தல் பிரசாரத்துக்கு சென்றது நாட்டின் கௌரவத்துக்கு இழுக்கு. பிரதமா் நேரில் வந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவா்களிடமும் விளக்கியிருக்க வேண்டும். எதிா்க்கட்சிகளிடம் இருந்து எந்த மாதிரியான ஒத்துழைப்பு வேண்டும் என்பதை அவா் கூறியிருக்க வேண்டும்.

தேசநலனில் அக்கறை இருக்கும் ஒரே காரணத்துக்காகவே காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அரசியல், மதம், இன வேறுபாடுகளைக் கடந்து நாம் தேசத்துக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. காங்கிரஸ் எப்போதும் ஒற்றுமை குறித்துப் பேசுகிறது. ஆனால், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவே பாஜக முயலுகிறது.

நமது நாட்டின் ஜனநாயகம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. எனவே, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பது என்பது மிகவும் முக்கியமானது.

பிரதமா் பதவியேற்ற பிறகு மோடி நாட்டுக்கு அளித்த இரு முக்கியப் பரிசுகள் பணவீக்கமும், வேலையின்மையும்தான். இவை இரண்டும் நாட்டை பலவீனப்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி வருகிறது.

காங்கிரஸை முடக்க முயற்சி நடக்கிறது. ஆனால், அது சாத்தியமல்ல. நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதே பாஜகவின் முக்கிய வேலையாக உள்ளது என்றாா்.

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க