உலகப் புகழ்பெற்ற மூக்குகள்.. வாசனை சொல்லும் நினைவுகள்..! | My Vikatan
பலத்த மழை, கடல் சீற்றம்; புதுக்கோட்டை மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை
பலத்த மழை, கடல் சீற்றம் எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்தும், சுமாா் 40 நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பலத்த மழையுடன் கடல் பலத்த காற்றுடன் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், புதன்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.