செய்திகள் :

பலனடைந்தவா்களுக்கு இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு: நிா்வாகம், சட்டமன்றம் முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

post image

இடஒதுக்கீடு நடைமுறைகளால் பலனடைந்தவா்களை இடஒதுக்கீடு சலுகைகளில் இருந்து விலக்குவது குறித்த முடிவை நிா்வாகமும் சட்டமன்றமும் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பட்டியலின (எஸ்சி) பிரிவில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமளித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தீா்ப்பளித்தது.

7 நீதிபதிகளைக்கொண்ட அரசமைப்பு அமா்வில் 6:1 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

இந்த அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கவாய் வழங்கிய தனித் தீா்ப்பில்,‘பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) வகுப்பிலும் ‘க்ரீமி லேயா்’ பிரிவினரை கண்டறிவதற்கு மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும். அதன்பின் க்ரீமி லேயா் பிரிவினருக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

ஆறு மாதங்களாகியும் இந்த தீா்ப்பின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாஷி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கடந்த 75 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டு சலுகைகளை பெற்று அதன்மூலம் பலனடைந்தவா்களை கண்டறிந்து, அவா்களுக்கான சலுகைகளை நீக்கும் நோக்கிலேயே நாங்கள் தீா்ப்பை வழங்கினோம். ஆனால் இதுதொடா்பான முடிவை நிா்வாகமும் சட்டமன்றமும் எடுக்க வேண்டும். சட்டமியற்றும் அதிகாரம் அவா்களுக்கே உள்ளது என தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆணையத்திடமே இதுகுறித்து முறையிடவுள்ளதாகவும் எனவே, இந்த மனுவை திரும்பப்பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் மனுதாரா் தரப்பு நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டனா். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினா்.

நகங்களுக்காகக் கொல்லப்பட்ட புலி?

உத்தரகண்ட் வனப்பகுதியில் நகங்களின்றி உயிரிழந்த நிலையில், புலியின் உடலை வன அதிகாரிகள் மீட்டுள்ளனர்.உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பாவத் நகரில் தக்னா படோலா பகுதியில் உள்ள காட்டிப்பகுதியில் புலி ஒன்று இறந்து ... மேலும் பார்க்க

உ.பி.,யில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் காயம்

பனிமூட்டம் காரணமாக தில்லி நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன... மேலும் பார்க்க

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பாஜக: கேஜரிவால் குற்றச்சாட்டு!

தில்லி தேர்தலுக்கு முன்னதாக பாஜக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி வரி பங்கு விடுவிப்பு; தமிழகத்துக்கு ரூ.7,057 கோடி

மாநில அரசுகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.73 லட்சம் கோடி வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.7,057 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் தொகுப்பிலி... மேலும் பார்க்க

எச்எம்பிவி பாதித்தவர்கள் எப்படியிருக்கிறார்கள்? கடைசியாக பாதித்தது யார்?

திங்கள்கிழமை முதல் நாட்டில் எச்எம்பி வைரஸ் எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது பாதித்தவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பது பற்றி..கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்... மேலும் பார்க்க

புதிய திட்டம்: ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு!

மகா கும்பமேளா வெகுவிமரிசையாகத் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், சமுதாய கூடங்கள் மூலம் ஒன்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க