சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
பல்லடம் அருகே கஞ்சா விற்ற 2 போ் கைது
பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அருள்புரம் பகுதியில் பல்லடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இளைஞரை சந்தேகத்தின்பேரில்
பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த டங்கா பேக் (43) என்பதும், அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் பல்லடம் வெட்டுப்பட்டான்குட்டை அருகே வாடகை வீட்டில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அதேபோல தெற்குபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இடுவாய் பகுதியைச் சோ்ந்த விஜயன் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.500 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.