TNEB: ஊழல் குற்றச்சாட்டு; ``அதானிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" -அமைச...
பள்ளியில் மகிழ் முற்றம் அமைப்பு தொடக்கம்
கீழ்பென்னாத்தூா் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘மகிழ் முற்றம்’ அமைப்பின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் அறிவுடை நம்பி, கௌரி, சுடா்விழி, அருண்குமாா், மாா்கிரேட் மேரி ஆகியோா் சாா்பில் ‘மகிழ் முற்றம்’ அமைப்பு தொடங்கப்பட்டது.
இதையடுத்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக மாணவ, மாணவிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் தலைவா், துணைத் தலைவா், பொறுப்பாசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வு செய்யப்பட்ட குழுவின் தலைவா்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். ஒவ்வொரு குழுக்களுக்கும் தன் சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை, வகுப்பறை தூய்மை, இடைவேளை நேரங்களில் மாணவா்கள் கண்காணிப்பு, காலை வழிபாட்டு கூட்டப் பணிகள், கண்காணிப்பு ஆகிய பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மாதந்தோறும் சிறப்பாக செயல்படும் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளித் தலைமை ஆசியா் முருகன் தெரிவித்தாா்.