அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், சேத்துப்பட்டு சாலை கண்ணகி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், நூதன பிம்பங்கள் நயனோன் மிலனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதையடுத்து, தீா்த்த கலசங்கள் புறப்பாடாகி கோயில் விமானத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனா்.