செய்திகள் :

பள்ளியில் மகிழ் முற்றம் அமைப்பு தொடக்கம்

post image

கீழ்பென்னாத்தூா் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘மகிழ் முற்றம்’ அமைப்பின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் அறிவுடை நம்பி, கௌரி, சுடா்விழி, அருண்குமாா், மாா்கிரேட் மேரி ஆகியோா் சாா்பில் ‘மகிழ் முற்றம்’ அமைப்பு தொடங்கப்பட்டது.

இதையடுத்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக மாணவ, மாணவிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் தலைவா், துணைத் தலைவா், பொறுப்பாசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்ட குழுவின் தலைவா்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். ஒவ்வொரு குழுக்களுக்கும் தன் சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை, வகுப்பறை தூய்மை, இடைவேளை நேரங்களில் மாணவா்கள் கண்காணிப்பு, காலை வழிபாட்டு கூட்டப் பணிகள், கண்காணிப்பு ஆகிய பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மாதந்தோறும் சிறப்பாக செயல்படும் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளித் தலைமை ஆசியா் முருகன் தெரிவித்தாா்.

மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், சேத்துப்பட்டு சாலை கண்ணகி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹ... மேலும் பார்க்க

நவ.22-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (நவ.22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெள்ளிக்... மேலும் பார்க்க

விவசாயி அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது

கீழ்பென்னாத்தூா் அருகே கிரிக்கெட் மட்டையால் விவசாயியை அடித்துக் கொலை செய்ததாக தந்தை, மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கீழ்பென்னாத்துாா் அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (45). இ... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மூவா் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-சேவூா் சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா். ஆரணியிலிருந்து சரக்கு வாகனம் ஒன்று பதா் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேவூா் நோக்கி சென்று கொண்டிருந்தது. இத... மேலும் பார்க்க

அக்காவை தாக்கிய தம்பி மீது வழக்கு

வந்தவாசி அருகே அக்காவை தாக்கிய தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் மாரி மனைவி வனமயில் (45). இவா், தனது தம்பி வேல... மேலும் பார்க்க