செய்திகள் :

ஐபிஎல் ஏலம் பெர்த் டெஸ்ட்டை பாதிக்காது..! கம்மின்ஸ் பேட்டி!

post image

டேனியல் வெட்டோரி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருப்பதால் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க செல்வார்.

நவ.24,25 ஆம் தேதிகளில் ஏலம் நடைபெறுகிறது. பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் நவ.22 முதல் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்டில் டேனியல் வெட்டோரி பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்மின்ஸ், ஹெட் மட்டுமே தற்போதுள்ள ஆஸி. அணியில் ஐபிஎல் ஏலத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். மற்ற ஆஸி. வீரர்கள் யாரும் தேர்வாகவில்லை.

ரிக்கி பாண்டிங் (பஞ்சாப்), ஜஸ்டின் லாங்கர் (லக்னௌ) தலைமைப் பயிற்சியாளராக இருப்பதால் அவர்களும் ஏலத்தில் பங்கேற்பார்கள்.

ரிக்கி பாண்டிங், “இரு அணியிலும் ஏலத்தில் பலர் பங்கேற்கிறார்கள். டெஸ்ட்டுக்கும் ஏலத்துக்கும் 9 நாள்கள் முன்பு நடத்தியிருக்கலாம். இது தேவையில்லாத அழுத்ததை தரும்” எனக் கூறியிருந்தார்.

இது குறித்து ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

டேனியல் வெட்டோரி ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வார். இது எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. டேனியல் அங்கு சென்றாலும் இங்கு தற்போது முழு தயாரிப்புகளில் உடன் இருக்கிறார். கூட்டங்கள், உரையாடல்கள் என அனைத்தும் முடித்துவிட்டார்.

வீரர்கள் குறித்து தெரியவில்லை. அதிகமான வீரர்கள் பலரும் ஏற்கனவே அங்கு இருந்துள்ளார்கள். அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது. யார் யாரை தேர்வு செய்வார்கள் செய்யமாட்டார்கள் என்பது அவர்களிடம் இல்லை. வெறுமனே உட்கார்ந்து பார்த்துகொண்டிருக்க வேண்டும். முதல் இரண்டு நாள்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்குமென தற்போதுவரை தெரியவில்லை.

நாங்கள் முழு கவனத்துடன் பெர்த் டெஸ்ட்டில் விளையாடுவோம். ஏலத்தின் நேரம் முதல் இரண்டு நாள்களில் எந்த இடையூரையும் ஏற்படுத்தாது. எங்களின் சிறந்த முயற்சியை அளிப்போம் என்றார்.

கேப்டன்சி பதவியல்ல, பொறுப்பு..! பும்ரா பேட்டி!

இந்திய அணி நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ஆஸி. உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது.நாளை (நவ.22) நடைபெறவுள்ள ... மேலும் பார்க்க

முந்தைய தோல்வி குறித்து கவலையில்லை..! பும்ரா அதிரடி!

இந்திய அணி நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ஆஸி. உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது. நாளை (நவ.22) நடைபெறவுள்ள... மேலும் பார்க்க

உலக விளையாட்டுகளிலே முக்கியமானதாக மாறியுள்ளது..! பிஜிடி தொடர் குறித்து ரிக்கி பாண்டிங்!

ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி மிகவும் பிரபலமானது. 142 வருடங்களில் 345 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஆஸி. 142 போட்டிகளிலும் இங்கிலாந்து 110 போட்டிகளிலும் வென்றுள்ளன. அதேவேளை... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் ரூ.28 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்..! முன்னாள் வீரர் நம்பிக்கை!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவாரென முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். நவ.24,25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவில் ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கிறது. தில... மேலும் பார்க்க

ஒரே தொடரில் 1,258 பந்துகள் விளையாடிய புஜாரா..! அணியில் இல்லாததால் மகிழ்ந்த ஆஸி. பந்துவீச்சாளர்!

இந்தியா ஆஸி அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (நவ.22) பெர்த் ஆடுகளத்தில் நடைபெறவிருக்கிறது. கடந்த சீசனில் ஆஸி.யை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ரஹானே, புஜாரா இந்தமுறை இந்திய டெஸ்ட் ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் விராட் கோலியின் பேட்..! விலை ரூ.1.65 லட்சம்!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிரிக்கெட் உபகரணங்கள் விற்கும் மை... மேலும் பார்க்க