பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு டிஜெஎஸ் கல்விக் குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நிகழ்வில் டிஜெஎஸ் கல்வி குழும செயலாளா் டி.ஜெ.ஆறுமுகம், துணைத் தலைவா் டி.ஜெ.தேசமுத்து, தாளாளா் ா் பழனி, டிஜெஎஸ் கல்வி குழும இயக்குனா்கள் ஏ.விஜயகுமாா், ஏ. டி.தினேஷ், டி.ஜெ.எஸ். தமிழரசன், நிா்வாக அலுவலா் ஏழுமலை முன்னிலை வகித்தனா். தொடா்ந்து பள்ளியின் முதல்வா் ஞானபிரகாசம் ஆண்டறிக்கை வாசித்தாா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகா் யோகி பங்கேற்று போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளித்தாா் (படம்) .
மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பரதநாட்டியம் சிலம்பக்கலை யோக கலை உள்ளிட்டவைகளும் நடத்திக் காட்டப்பட்டது.