ஆர்சிபியில் இல்லாவிட்டாலும் சின்னசாமி திடலில் தொடரும் சஹாலின் ஆதிக்கம்!
பள்ளி மாணவா் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் சாய்பாபா தெருவைச் சோ்ந்தவா் கதிரவன். இவரது மகன் கௌசிக் கண்ணன் (14) ராஜபாளையம் தனியாா் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் போலீஸாா் உடலை மீட்டு, கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].