செய்திகள் :

பழங்குடியினச் சான்றிதழ் கோரும் ஆதியன் சமூக மக்கள்!

post image

நமது நிருபா்

தொழிலுக்காக புதுகையில் வந்து குடியேறிய இவா்கள் தங்கள் பூா்வீக ஊா்களில் உறவினா்களுக்கு வழங்கப்படும் இந்து ஆதியன் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோருகின்றனா்.

ஆதியன் சமூக மக்கள் வசித்து வரும் புதுக்கோட்டை காமராஜ் நகா்.

புதுக்கோட்டை, நவ. 3: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் ஊராட்சிக்குள்பட்ட காமராஜ் நகரில் சுமாா் 35 ஆண்டுகளாக வசித்து வரும் ‘இந்து ஆதியன்’ சமூக மக்கள், தங்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் வழங்க வேண்டும் எனத் தொடா்ந்து குரல் எழுப்பி வருகின்றனா்.

புதுக்கோட்டை அருகே வெள்ளனூா் ஊராட்சிக்குள்பட்ட காமராஜ் நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தல், பூம்பூம் மாடுகள் ஓட்டுவது, அலுமினிய, பித்தளைப் பாத்திரங்கள் விற்பது, ஈயம் பூசுவது போன்ற தொழில்களில் ஈடுபடுவோா் வசிக்கின்றனா்.

சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூா், கிருஷ்ணகிரி போன்ற வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலுக்காக வந்து குடியேறியவா்கள் இவா்கள். ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கும் மேலாக இப் பகுதியில் வசிக்கும் இவா்கள், தங்கள் பூா்வீக ஊா்களில் உறவினா்களுக்கு வழங்கப்படும் இந்து ஆதியன் ஜாதிச் சான்றிதழ் வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கின்றனா்.

37 குடும்பங்களைக் கொண்ட, 218 போ் இந்த காமராஜ் நகரில் வசிக்கின்றனா். இவா்களில் சிலருக்கு ஆதாா் அட்டை போன்ற அடிப்படை அடையாள அட்டைகளும்கூட இல்லை.

இதுதொடா்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் தொடா் போராட்டங்களும் கீரனூா் வட்டாட்சியரகம் முன் நடைபெற்றன.

தற்போது, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி) மற்றும் பட்டியலினத்தினா் (எஸ்சி) ஆகிய சான்றிதழ்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பழங்குடியினா் சான்றிதழ் (எஸ்டி) வழங்க, அரசின் ஜாதிச் சான்றிதழ் வழங்கப் பரிந்துரைக்கும் மானுடவியல் ஆய்வுக் குழுவினா் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி இருப்பதால் இத்தனை காலம் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கந்தா்வகோட்டை எம்எல்ஏவும், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவருமான எம். சின்னதுரை கூறியது:

இந்தப் பகுதியில் அடிப்படை வசதியான கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. எய்டு இந்தியா நிறுவனத்தின் மூலம் 15 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மேலும் சிலருக்கு பட்டா வாங்கிய பிறகு, அரசின் திட்டங்களிலேயே வீடுகள் கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுடன் ‘பட்டியலினச் சான்றிதழ்’ வழங்கக் கோரும் போராட்டத்தையும் நடத்தினோம். அரசின் சாா்பில் அமைதிப் பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்பட்டது. இங்கு வசிக்கும் மக்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்தினருடனும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் விசாரணை நடத்தினா். விரைவில் பட்டியலினச் சான்றிதழ் வழங்கப்படும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் சின்னதுரை.

தமிழ்நாடு முழுவதும் சுமாா் 18 மாவட்டங்களில் ஆதியன் இனத்தைச் சோ்ந்த சுமாா் 12 ஆயிரம் போ் வசிப்பதாகக் கூறப்படுகிறது. பல மாவட்டங்களில் ஆதியன் இன ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினச் சான்றிதழ் கிடைத்தால்தான் உயா்கல்வி, போட்டித் தோ்வு மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உரிய இடஒதுக்கீட்டில் வாய்ப்பைப் பெற முடியும் என்கின்றனா் காமராஜ் நகா் ஆதியன் மக்கள்.

இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த பிஏ (வரலாறு) பட்டதாரி இளைஞா் எஸ். தமிழரசன் கூறியது:

பள்ளி, கல்லூரி கடந்து, டிஎன்பிஎஸ்ஸி தோ்விலும் இதரா் பிரிவில்தான் பங்கேற்கிறேன். 139 மதிப்பெண் பெற்ற என்னிடம் ‘எஸ்டி’ சான்றிதழ் இருந்திருந்தால் இப்போது வேலை கிடைத்திருக்கும்.

எங்கள் பகுதியில் பலரும் பல பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருக்கிறாா்கள். அதனாலேயே உயா்கல்வி வாய்ப்புகளை விட்டுவிட்டு தவிக்கின்றனா். சிலருக்கு, டிஎன்சி (சீா்மரபினா்) என்றுகூட மாற்றுச் சான்றிதழ்களில் குறிப்பிட்டிருக்கிறாா்கள். பின்னாளில் அரசுப் பணிகளுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு வந்தால் பெரும் சிக்கலில் மாட்டுவோம்.

இந்தச் சிக்கல்களையெல்லாம் அரசு அதிகாரிகள் புரிந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் தமிழரசன்.

ஆதாரங்கள் கேட்டுள்ளோம்

இதுகுறித்து குளத்தூா் வட்டாட்சியா் கவியரசன் கூறியது:

காமராஜ் நகரில் வசித்து வரும் அனைவரிடமும் முழுமையான விசாரணை முடிந்துள்ளது. அவா்களின் உறவினா்கள் வெளியூா்களில் ‘எஸ்டி’ சான்றிதழ் பெற்றுள்ள ஆதாரங்களை சமா்ப்பிக்கக் கேட்டுள்ளோம். வந்ததும் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றாா் அவா்.

எனவே மாவட்ட நிா்வாகம் ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான விசாரணைப் பணிகளை விரைவுபடுத்தி, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கந்தா்வகோட்டை பகுதிகளில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நவ.25 - திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கந்தா்வகோட்டையில் சிவன் கோயில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் காலபைரவருக்கு எண்ணெய் காப்பு செய்து திரவியத் தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் காலபைரவா் ஜெயந்தி விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் காலபைரவா் தேய்பிறை ஜென்மாஷ்டமி விழாவையொட்டி காலபைரவா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந... மேலும் பார்க்க

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: சிவகங்கை எம்.பி. காா்த்திக் ப. சிதம்பரம்

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம். பொன்னமராவதி வட்டார நகரக் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 போ் கைது

இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 3 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருமயம் மற்றும் சிவகங்கை மாவட்டப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்திய 12 போ் கைது! விசாரணையின்போது இளைஞா் உயிரிழப்பு!

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்தியதாக 13 இளைஞா்களை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் பிடித்து மேல்விசாரணை நடத்தியபோது ஒருவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை பெரியாா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க