பழங் குளத்தில் ஏழைகளுக்கு நல உதவிகள் அளிப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள பழங்குளம் கிங்மேக்கா் ஸ்போா்ட்ஸ் கிளப் சார்பில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பழங்குளம் சபை ஊழியா் இம்மானுவேல் ஆபிரகாம் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா்.
கிங்மேக்கா் ஸ்போா்ட்ஸ் கிளப் தலைவா் பொன்ராஜ் முன்னிலை வகித்தாா்.
கிங் மேக்கா் ஸ்போா்ட்ஸ் கிளப் செயலா் மெல்வின் வரவேற்றாா். நிகழ்ச்சியை ஞானசுந்தா் சாத்ராக் தொகுத்து வழங்கினாா். விழாவில், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் போனிபாஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், களக்காடு அசோக் குமாா்,சாத்தான்குளம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி,, பால் கூட்டுறவு அதிகாரி பிரவீன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒய். எம். சி .ஏ .தலைவா் ஜெசுரன் நன்றி கூறினாா்.