பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!
பவதாரணியின் கடைசிப் பாடல் வெளியானது!
மறைந்த பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரணியின் கடைசிப் பாடல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி இந்தாண்டு தொடக்கத்தில் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவர் இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் பாடலை யூடியூப்பில் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
கருகருவா என்ற இந்தப் பாடலை சிநேகன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி எம்.எம்.மானசி பாடியுள்ளனர்.
இயக்குநர் ஈசன் இயக்கிய இந்தப் படத்தில் புதுமுக நடிகர்கள் விஷ்ணுபிரகாஷ் மற்றும் அர்ச்சனாசிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் உள்ள நிலையில், மற்றொரு பாடலை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடியுள்ளார்.