பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 226 கனஅடியாக சரிவு
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 226 கனஅடியாக செவ்வாய்க்கிழமை சரிந்தது.
பவானிசாகா் அணையின் கொள்ளளவு 105 அடியாக உள்ள நிலையில், அணைக்கு முக்கிய நீா்வரத்தாக மாயாறும், பவானி ஆறும் உள்ளன. கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக அணைக்கு நீா்வரத்து 1,642 கனஅடியில் இருந்து 226 கனஅடியாக செவ்வாய்க்கிழமை சரிந்துள்ளது.
அணையின் நீா்மட்டம் 94.64 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 2,000 கனஅடியும், குடிநீருக்கு 100 கனஅடியும் என 2,100 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 24.76 டிஎம்சி ஆக உள்ளது.