செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: 3 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் குஜராத் வந்தடைந்தன

post image

அகமதாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் குஜராத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் அகமதாபாத் மற்றும் சூரத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சூரத்தைச் சேர்ந்த சைலேஷ் கலாதியா, பாவ்நகரைச் சேர்ந்த யதீஷ் பர்மர் மற்றும் அவரது மகன் ஸ்மித் ஆகியோர் அடங்குவர்.

மும்பையில் இருந்து ஒரு விமானத்தில் யதீஷ் பர்மர் மற்றும் அவரது மகன் ஸ்மித்தின் உடல்கள் அகமதாபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. விமான நிலையத்திலிருந்து, பர்மர் மற்றும் அவரது மகனின் உடல்கள் ஒரு ஆம்பூலன்ஸ் மூலம் பாவ்நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

வியாழக்கிழமை நடைபெறும் யதீஷ் மற்றும் ஸ்மித் பர்மரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக முதல்வர் பூபேந்திர படேல் பாவ்நகர் சென்றுள்ளார்.

இதர சுற்றுலாப் பயணிகள் அதே விமானத்தில் ஸ்ரீநகரிலிருந்து மும்பைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர்கள் மும்பையிலிருந்து சொகுசு பேருந்தில் பாவ்நகருக்கு அழைத்து வரப்படுவதாக பாவ்நகர் ஆட்சியர் மணீஷ் குமார் பன்சால் கூறினார்.

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

மேலும், புதன்கிழமை இரவு மற்றொரு விமானத்தில் கலாதியாவின் உடல் சூரத் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தாக்குதலில் இருந்து தப்பிய கலாதியாவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அதே விமானத்தில் சூரத் வந்தடைந்தனர்.

சூரத் விமான நிலையத்தில், கலாதியாவின் உடலுக்கு மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான ம... மேலும் பார்க்க

தஞ்சை அரசு மருத்துவமனை மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் தீ விபத்து!

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த பிரிவில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உடனடியாக வெளி... மேலும் பார்க்க

ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம் விடியோ

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா. பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் விடியோ வெளியிட்டுள்ளார்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள ஆதீனம் மடத்திலிருந்து மதுரை ஆதீனம்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளை... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசாா்ட் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ... மேலும் பார்க்க