செய்திகள் :

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 10 தீவிரவாதிகள் பலி!

post image

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் பலியாகினர்.

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலூச் விடுதலை அமைப்பினர் சிறைப்பிடித்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் 21 பயணிகளும், 4 ராணுவ வீரர்களும் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு நாள்கள்கூட ஆகாத நிலையில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகள் ஜந்தோலா சோதனைச் சாவடியைத் தாக்க முயன்றுள்ளனர். எல்லைப்புறப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின் அடிப்படையில், பயங்கரவாதம் தொடர்பான இறப்புகளில் பாகிஸ்தான் 45 சதவிகிதத்துக்கு அதிகமான உயிரிழப்பை கண்டுள்ளது.

அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டில் 748 முறை பயங்கரவாத தாக்குதல்களும், 2024 ஆம் ஆண்டில் 1,081 பயங்கரவாத தாக்குதல்களும் நடைபெற்றுள்ளது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்கா: தரையிறங்கிய விமானத்தில் தீ! 172 பயணிகள் நிலை?

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவுகிறது.முதல்கட்டமாக வெளியான தகவலின்படி, விமானத்தில் பயணித்த 172 பயணிகளும் பத்... மேலும் பார்க்க

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாா்: டுடோ்த்தே

ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தே கூறியுள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரை... மேலும் பார்க்க

உக்ரைன் அமைதி திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள்: விளாதிமீா் புதின்

உக்ரைன் முன்வைத்துள்ள 30 நாள் போா் நிறுத்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா். ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்காவுடன் பே... மேலும் பார்க்க

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது - வங்கதேச வெளியுறவு அமைச்சகம்

‘எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம்’ என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. வங்கதேசத்தில் வன்முறை... மேலும் பார்க்க

கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரைக் கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லைப் பகுதியில் உள்ள கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரான சுட்லாவில் இருந்து உக்ரைன் ராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றியதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட... மேலும் பார்க்க