ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!
உள்ளாட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்! விரைவில் சட்டம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க : 3 வழித்தடங்களில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை! ரயில்வே அறிவிப்புகள்!
அப்போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
முக்கிய அறிவிப்புகள்:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ. 1,433 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 மாற்றுத் திறனாளி ஊழியர்களை பணியமர்த்தி இருந்தால், அந்த நிறுவனத்துக்கு மாதம்தோறும் ஒரு மாற்றுத்திறனாளி பணியாளருக்கு ரூ. 2,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவை தொடரில் சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.