சென்னை: பெண் தொழிலதிபரிடம் ரூ.10.89 கோடி மோசடி - தம்பதி, வழக்கறிஞர் கைது!
பாஜக - அதிமுக கூட்டணி: ”வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப்போட்டி இருக்கலாம்” - நயினார் நாகேந்திரன்
நெல்லையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைப்பது குறித்து இப்போது என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷா மற்றும் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

அதன்பிறகு நல்லதே நடக்கும். நானும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க தலைவர்களுடன் கூட்டணி பற்றி பேசியுள்ளேன். டி.டி.வி தினகரன் கூறியபடி வரும் சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப்போட்டியும் இருக்கலாம், 5 முனைப்போட்டியும் இருக்கலாம்.
ஆனால், தேர்தலில் ஜெயிக்கப் போவது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். அ.தி.மு.கவில் எந்தவித குழப்பமும் இல்லை. செங்கோட்டையன் திடீர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்பதிலும் உண்மையில்லை.

அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால்தான் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்திக்கிறார். நடிகர் விஜய்யின் கட்சி கூட்டம், அரசியல் பயணம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. கூட்டம் சேர்த்தால் மட்டும் ஜெயிக்க முடியுமா? வாக்குகள் வாங்கினால் மட்டுமே ஜெயிக்க முடியும்” என்றார்.