செய்திகள் :

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

post image

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வேலூர் மாவட்டத்தில் இன்று 21 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். மத்திய அரசுக்கு எதிராக இதில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் வேலூரில், திமுக vs தவெக போட்டி என விஜய் கூறியது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"யார் யாருக்கு போட்டியோ, அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, எங்கள் கட்சியில் நாங்கள் உழைப்போம், நாங்கள் ஜெயிப்போம்.

யார் யாரோடு சேருகிறார்கள் என்றெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை" என்று தெரிவித்தார்.

இதில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,

"இந்த ரூ. 4,034 கோடி யாருடைய அப்பன் வீட்டு பணமும் கிடையாது. மத்திய அரசின் பணம். இதை நிறுத்தக் காரணம் இந்த திட்டத்தின் பெயர்தான். 'மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது மோடி அரசுக்கு பிடிக்கவில்லை. காந்தியை சுட்டவர்கள் அவர்கள். காந்தியின் பெயரில் இத்திட்டம் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை அதனால்தான் பணம் தர மறுக்கிறார்கள்.

மோடி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. பாஜக, மோடி என்று சொல்லி இனி ஓட்டுக் கேட்க முடியாது. அந்த அளவுக்கு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள்.

மோடி அல்ல, அவன் பாட்டன் சொன்னாலும் மக்கள் பணத்தை வாங்கித் தராமல் விடமாட்டோம்" என பேசினார்.

இதையும் படிக்க | 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வர் யார்? சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

மதுரையில் பினராயி விஜயன்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு தொடங்கியது!

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இன்று தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை நடைப... மேலும் பார்க்க

பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து கவிழ்ந்த லாரி: ஓட்டுநர்கள் 2 பேர் காயம்

திண்டுக்கல்: நத்தம் அருகே பாரம் தாங்காமல் சாக்கடை உடைந்து லாரி கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் 2 பேர் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம், தென்காசியில் இருந்து நெல் உமி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொகுதி மறுசீர... மேலும் பார்க்க

வடக்கு காஸா மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பக... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!

மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 35 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது. மியான்மரில் கடந்த மார்ச் 28 அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!

யேமன் நாட்டின் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.யேமனின் வடக்கு சனா மற்றும் சதா மாகாணங்களின் மீது அமெரிக்க கடந்த சில மணி நேரங்களில் மட்டும... மேலும் பார்க்க