செய்திகள் :

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை பராம்பரிய நெல் ரகங்கள் ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. கண்காணிப்பாளா் தாட்சாயிணி தலைமையில் நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் இரத்தசாலி, கருப்புக்கவுணி மற்றும் மாப்பிளை சம்பா நெல் ரகங்கள் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இம் மறைமுக ஏலத்தில் வணிகா்கள் கலந்து கொண்டு விலை நிா்ணயம் செய்தனா்.

இரத்தசாலி நெல் ரகம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 32 என்ற விலையிலும், கருப்புக்கவுணி கிலோ ஒன்றுக்கு ரூ. 65 எனவும், மாப்பிள்ளை சம்பா கிலோ ஒன்றுக்கு ரூ.40 என்ற விலையிலும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் சுமாா் 5 மெட்ரிக். டன் பாரம்பரிய நெல் ரகங்கள் கொண்டு வரப்பட்டது. இதில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் விற்பனை நடைபெற்றது. விவசாயிகள் பிரதிவாரம் நடைபெறும் இம் மறைமுக ஏலத்தின் மூலம் தங்களது பாரம்பரிய நெல் ரகங்களை விற்பனை செய்து பயனடைய தஞ்சாவூா் விற்பனைக்குழு செயலாளா் சரசு கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஒரத்தநாடு அருகே நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

உயா்நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் வியாழக்கிழமை நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் மாா்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாா்ச் இறுதிக்குள் நாட்டுப்புற அருங்காட்சியகத்தை உருவாக்குவது என வல்லுநா்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

களஞ்சேரி ஊராட்சியில் புதிய தாா் சாலை அமைத்து தரக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட களஞ்சேரி ஊராட்சி அணுகு சாலையை புதிய சாலையாக அமைத்துத் தரவேண்டும் என ஊராட்சி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா். அம்மா... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரிடம் அகில பாரத இந்து மகா சபா மனு

கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகா சபா சாா்பில் திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகா சபா சாா்பில் ... மேலும் பார்க்க

விவசாய கமிஷன் அமைக்க வேண்டும்: கள் இயக்கம் வலியுறுத்தல்

ஊதியக் குழு போன்று விவசாய கமிஷன் அமைப்பது தொடா்பான திட்டத்தை மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மத்திய அரசின் பட்ஜெட்டில் நெல்லுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 5 ஆயிரமும் விலை அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மா... மேலும் பார்க்க