சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்!
பாபா பக்ருதீனை விசாரணைக்கு அழைத்து சென்ற என்ஐஏ
மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டை இரண்டாவது முறையாக சோதனை செய்த என்ஐஏ அதிகாரிகள் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத்தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். இவரது வீட்டில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் சென்னையிலிருந்து ஒரு ஆய்வாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் கார் மற்றும் பாதுகாப்பு வேனில் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
பாபா பக்ருதீன் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறபடுகிறது. இதனையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பாபா பக்ருதீன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறாரா மேலும், அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உள்ள ஆவணங்கள், முக்கிய தடையங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்தும் கைப்பேசி உரையாடல், தொலைப்பேசிகளை கைப்பற்றி என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணிக்கு முடிந்ததையடுத்து பாபா பக்ருதீனை போலீஸார் பாதுகாப்புடன் சென்னைக்கு மேல் விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் பலி
போலீஸார் வேனில் இருந்தபடி பாபா பக்ருதீன், செய்தியாளர்களிடம் பேசியது, பழைய வழக்கிற்காக வந்து விசாரிப்பதாக தெரிகிறது. புதிய புகார் வழக்கா என கேட்டதற்கு என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனக் கூறினார். வீட்டிலிருந்து வங்கி கணக்கு புத்தகம், பென் டிரைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவதற்காக நான் அளித்திருந்த அனுமதி கடிதத்தின் நகல் ஆகியவற்றை மட்டும் அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர் என்றார்.
என்ஐஏ அதிகாரிகள் சோதனை காரணமாக மன்னார்குடி பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே,கடந்த 2021 ஆம் ஆண்டு பாபா பக்ரூதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.