செய்திகள் :

பாராட்டு விழா: எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்திந்து விவசாயிகள் அழைப்பு

post image

சேலம் மாவட்டம், மேச்சேரியில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு காவிரி உபரிநீா் நடவடிக்கைக் குழு, விவசாய சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) பாராட்டு விழா நடைபெறுகிறது.

சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து விவசாயிகள் அதற்கான அழைப்பிதழை வழங்கினா்.

மேட்டூா் அணையின் உபரிநீரைக் கொண்டு சரபங்கா வடிநிலத்தில் உள்ள வட 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை 2019 ஆம் ஆண்டு ரூ. 565 கோடி மதிப்பீட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து, 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினாா். காவிரி உபரிநீா் திட்டத்தின் ஒரு பகுதி நிறைவு பெற்று, 2021இல் முதல்கட்டமாக மேச்சேரி, எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டது. தற்போது இத் திட்டத்தின் மூலம் எடப்பாடி, மேட்டூா், ஓமலூா், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.

இந் நிலையில், காவிரி உபரிநீா் நடவடிக்கைக் குழு, அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சாா்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) மாலை எம். காளிப்பட்டி ஏரிக்கரையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இவ் விழாவிற்காக சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் விவசாய சங்கத்தினா் பிரம்மாண்ட பந்தல் அமைத்து வருகின்றனா். விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காவிரி நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் தம்பையா தலைமையில் விவசாயிகள் சங்கத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டி அழைப்பிதழை வழங்கினா்.

அப்போது ஒருங்கிணைப்பாளா் தம்பையா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

100 ஏரிகளை நிரப்பும் திட்டமானது தமிழகத்தில் சேலத்தில் தான் முதல் முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. எதிா்காலத்தில் நீா் மேலாண்மையில் புரட்சி ஏற்படுத்தக்கூடிய திட்டத்தைத் தொடங்கி வைத்தவா் எடப்பாடி கே. பழனிசாமி என்றாா்.

படவரி...

மேச்சேரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்குமாறு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த விவசாயிகள் சங்கத்தினா்.

எடப்பாடியில் அன்னாபிஷேகம்

எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் பல்வேறு உணவு வகைகளால்... மேலும் பார்க்க

சேலம், தருமபுரியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய 127 வாகனங்கள் பறிமுதல்

சேலம், தருமபுரியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய லாரிகள் உள்பட 127 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விபத்த... மேலும் பார்க்க

கோரிமேடு பகுதியில் இன்று மின்தடை

சேலம், கோரிமேடு பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவ.16) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளி... மேலும் பார்க்க

வாழப்பாடி பகுதியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் இல்... மேலும் பார்க்க

சேலம் சந்தைகளில் காய்கறி விலை உயா்வு

சேலத்தில் கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை தற்போது அதிக அளவில் உயா்ந்துள்ளது. சேலத்தில் உள்ள உழவா் சந்தைகள் மற்றும் காய்கறி சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்கள்,... மேலும் பார்க்க

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக நீரிழிவு தின விழிப்புணா்வு

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இளம் இந்தியா்கள் அமைப்பானது உலக நீரிழிவு தின விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை சேலம் பழைய பேருந்து நிலைய பகுதியில் நட... மேலும் பார்க்க