புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கி...
பார்சிலோனாவின் விடாமுயற்சி..! 2-4லிருந்து 5-4 என த்ரில் வெற்றி!
சாம்பியன் லீக்கில் பார்சிலோனா அணி 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யுஇஎப்ஏ சாம்பியன் லீக்கின் அசத்தலான போட்டி இன்று நடைபெற்றது. அதில் பார்சிலோனா அணியும் பெனிபிசியா அணியும் மோதின.
முதல் பாதி முடிவில் பார்சிலோனா 1-3 என பின் தங்கியிருந்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலும் பார்சிலோனா அணி பிந்தங்கியே இருந்தது.
ஒரு கட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா பின் தங்கியிருந்தது.
பின்னர், மீண்டெழுந்த பார்சிலோனா கடைசியில் 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் லெவண்டாவ்ஸ்கி (13’,78’) இரண்டு கோல்களும் எரிக் கிராஸியே (86’) ஒரு கோலும் அடித்தார்கள்.
ரபினா (64’, 90+6’) இரண்டு கோல்கள் அடித்தார். இறுதிக் கட்டத்தில் 96ஆவது நிமிஷத்தில் அவர் அடித்த அற்புதமான கோலினால் பார்சிலோனா வெற்றியுடன் முடித்தது.
இந்த ஆண்டின் சிறந்த போட்டியாக இதுவே இருக்குமென கால்பந்து ரசிகர்களும் வர்ணனையாளர்களும் கூறுகிறார்கள்.
இந்தப் போட்டியில் 5 மஞ்சள் கார்டுகள், 1 ரெட் கார்டும் கொடுக்கப்பட்டன. பெனால்டி வாய்ப்புகள் தேவையில்லாமல் பார்சிலோனா அணிக்கு வழங்கப்பட்டதாக எதிரணி ரசிகர்கள் இந்தப் போட்டியை, “இந்தாண்டின் மிகச் சிறந்த திருட்டு” எனக் கூறி வருகிறார்கள்.