ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை வென்றார் சதர்லேண்ட்!
பாலமேடு ஜல்லிக்கட்டு: டிராக்டர், கார், பைக் பரிசு... பட்டையைக் கிளப்பிய காளைகளும், காளையர்களும்!
மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளுக்கு இரண்டாவதாக நடக்கும் பெரிய ஜல்லிக்கட்டு போட்டி பாலமேட்டில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இப்போட்டியில் மொத்தம் 10 சுற்றுகளில் 930 காளைகள் அவிழ்க்கப்பட்டன.
விறுவிறுப்பும் சுறுசுறுப்புமாக நடந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக 14 காளைகள் பிடித்து முதலிடம் வந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபனுக்கு கார் பரிசு அளிக்கப்பட்டது.
12 காளைகள் பிடித்து இரண்டாமிடம் வந்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராமுக்கு மோட்டார் பைக் பரிசாக அளிக்கப்பட்டது. 11 காளைகள் பிடித்து மூன்றாமிடம் வந்த பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரனுக்கு எலெக்ட்ரிக் பைக் பரிசாக அளிக்கப்பட்டது.
சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளர் சத்திரப்பட்டியைச் சேர்ந்த விஜய தங்கப்பாண்டிக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பெற்ற காளையின் உரிமையாளர் சின்னப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு கன்றுடன் கறவை மாடும், மூன்றாம் இடம் வந்த குருவித்துறையைச் சேர்ந்த பவித்திரனுக்கு விவசாய ரோட்டாவேட்டர் கருவி பரிசாக அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்து அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டைக் காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.