`Santhosh Narayanan-ம் நானும் ஆடுனா அனல் பறக்கும்!' - Gana Muthu | Pa.Ranjith | ...
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் ரத்து: அமைச்சர்
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளிகளில் இதுபோன்று பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதையும் படிக்க | வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! நடந்தது என்ன?
இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,
"தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் எங்கும் நடக்கமால் இருக்க தமிழக அரசால் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாலியல் சம்பவங்களில் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை மூலமாக கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமன்றி அவர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும்.
காவல்துறையும் பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க, அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்" என்று கூறினார்.