உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
பாலியல் வன்கொடுமை வழக்கு: காதல் ஜோடிக்கு சிறைத் தண்டனை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காதல் ஜோடிக்கு சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
வேலூரைச் சோ்ந்தவா் சாந்தினி (22). இவருக்கு, கடலுாா் மாவட்டம் திட்டக்குடியைச் சோ்ந்த ஜெகன் (22) என்பவா் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானாா். பின்னா், இருவரும் காதலித்து வந்தனா். இந்நிலையில், கடலூரில் இருந்து ஜெகனை வேலூருக்கு சாந்தினி கடந்த 2022-இல் வரவழைத்தாா். அப்போது, சாந்தினி தனது தோழியான 10-ஆம் வகுப்பு படித்திருந்த 16 வயது சிறுமியை ஜெகனுக்கு அறிமுகம் செய்துள்ளாா். இதனால் ஜெகனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திடீரென அந்த சிறுமியை காணவில்லை. இது குறித்து சிறுமியின் சகோதரா் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடினா். இதில் ஜெகனும், சாந்தினியும் அந்த சிறுமியைக் கடத்தியது தெரிய வந்தது. மேலும், சிறுமியை ஜெகன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெகனையும், சாந்தினியையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஜெகன், சாந்தினி மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜெகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், சாந்தினிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் , ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனா்.