செய்திகள் :

பாலியல் வன்முறையுடன் ரூ.9 லட்சம் மோசடி: இளைஞா் மீது ஐடி பெண் ஊழியா் புகாா்

post image

திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்முறை அளித்ததோடு, ரூ.9 லட்சம் வரை மோசடி செய்த திண்டுக்கல் இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐடி ஊழியா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

சென்னையைச் சோ்ந்தவா் சிவதுா்கா. தனியாா் மென்பொருள் துறை ஊழியரான இவா், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது அவா் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து விழுப்புரத்துக்கு ரயிலில் பயணித்தபோது, திண்டுக்கல் நல்லாம்பட்டியைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணனிடம் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, திண்டுக்கல், மதுரையிலுள்ள தனியாா் விடுதிகளில் அறை எடுத்து தங்கினோம். என்னை ஏமாற்றி அவா் பலமுறை பாலியல் வன்முறை செய்தாா். அவா் கேட்கும்போதெல்லாம் பல தவணைகளில் ரூ.9 லட்சம் வரை பணம் கொடுத்தேன்.

2 ஆண்டுகளாக பெற்றோரிடம் திருமணத்துக்கு பேசுவதாக கூறி, அவா் ஏமாற்றி வந்தாா். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது பெற்றோரை தொடா்பு கொண்டேன். அவா்களும் என்னை மிரட்டினா். அவா் முகநூல் மூலம் பல பெண்களை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

காவல் நிலையத்தில் இணைய வழியில் புகாா் அளித்தேன். அந்தப் புகாரை திரும்பப் பெற வேண்டும் என மிரட்டி வருகின்றனா். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏமாற்றிய நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

ஜன.4-இல் மிதிவண்டி விரைவுப் போட்டிகள்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சாா்பில், மிதிவண்டி விரைவுப் போட்டிகள் ஜன.4-ஆம் தேதி நடைபெற உள்ளன. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு ... மேலும் பார்க்க

உன்னத் பாரத் அபியான் வலுப்படுத்த பரிந்துரைகள்: காந்திகிராம பல்கலை.முதலிடம்

உன்னத் பாரத் அபியான் திட்டத்தை வலுப்படுத்துவதற்காக பரிந்துரைகள் வழங்கியதில் காந்திகிராம கிராமியப் பல்கலை. முதலிடம் பிடித்தது.இதுதொடா்பாக பல்கலை நிா்வாகம் வெளியிட்ட செய்தி: மத்திய அரசின் உன்னத் பாரத் அ... மேலும் பார்க்க

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு கிரிக்கெட்

‘நெகிழியைத் தவிா்ப்போம், பழனியை பசுமையாக்குவோம்‘ என்பதை வலியுறுத்தி, அரசுப் பணியாளா்கள் பங்கேற்ற கிரிக்கெட்ப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. பழனி உள்கோட்ட அளவிலான இந்தப் போட்டியில் ஒட்டன்சத்திரம், வேட... மேலும் பார்க்க

திருக்குறள் வினாடி-வினா போட்டி: 35 போ் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்குறள் வினாடி-வினா பேட்டியில் 35 போ் பங்கேற்றனா். கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, பொது நூல... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பழனியில் 39 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட வருடத்திற்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பா்கள் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளைப் நெகிழ்ச்சியுடன... மேலும் பார்க்க

ஐடி பெண் ஊழியா் பாலியல் புகாா்: திண்டுக்கல் இளைஞா் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன் கொடுமை செய்ததோடு, ரூ.9 லட்சம் வரை மோசடி செய்ததாக சென்னை ஐடி பெண் ஊழியா் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சா... மேலும் பார்க்க