Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரண...
பால் தாக்கரே மனைவி சிலை மீது சிவப்பு பெயிண்ட்டை ஊற்றிய மர்ம நபர்; மும்பை தாதர் பகுதியில் பதற்றம்
மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதான வளாகத்திற்கு வெளியில் ஒரு நுழைவு வாயிலில் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயின் மார்பளவு சிலை இருக்கிறது.
சிவாஜி பார்க் எப்போதும் பிஸியாகவே காணப்படும். பால்தாக்கரே இறந்தபோது அவரது உடல் சிவாஜி பார்க்கில்தான் தகனம் செய்யப்பட்டது.
பால்தாக்கரேயின் நினைவுச் சின்னமும் இதே சிவாஜி பார்க் பகுதியில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மேயர் பங்களாவாக இருந்த இடம் பால்தாக்கரேயின் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது.
இன்று காலை மர்ம நபர் யாரோ தாதர் சிவாஜி பார்க்கில் இருந்த மீனாதாய் தாக்கரே சிலை மீது சிவப்பு நிறப் பெயிண்டை ஊற்றியுள்ளார்.

இது குறித்து கேள்விப்பட்டதும் சிவசேனா(உத்தவ்) தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்து சிவப்பு பெயிண்ட்டை அகற்றி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இது குறித்து கேள்விப்பட்டதும் அருகில் வசிக்கும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார். உத்தவ் தாக்கரேயும் நேரில் சென்று பார்வையிட இருக்கிறார்.
வழக்கமாக சம்பவ இடத்தில் எப்போதும் போலீஸார் நிற்பது வழக்கம். ஆனால் சம்பவத்தின் போது எப்படி போலீஸார் இல்லாமல் போனார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சிலை அருகில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிற்பது தெரிய வந்துள்ளது.
அந்த நபர் யார் என்று அடையாளும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் தாதர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.