நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
பால் வழங்கும் விவசாயிகளுக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை: ஆவின் அறிவிப்பு
தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை வழங்கப்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தஞ்சாவூா் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியச் செயலாட்சியருமான பா. பிரியங்கா பங்கஜம், பொது மேலாளா் எஸ். சரவணக்குமாா் ஆகியோா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு சங்கங்கள் மூலம் தொடா்ந்து பால் வழங்கி வரும் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஏற்கெனவே அரசு கூடுதல் ஊக்க விலையாக லிட்டருக்கு ரூ. 3 வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பால் வழங்கும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அவா்களுக்கு ஒன்றியம் தனது சொந்த நிதியிலிருந்து லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை வழங்கும்.