செய்திகள் :

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

post image

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது, அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

நான் மக்களுக்காக வந்திருக்கிறேன், அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன்.

விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவைதான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார் என்று கூறினார்.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரைக்கும் இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லையே?. அதிமுக திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி ஒரு வியூக வகுப்பாளர் தேவையா?. இதே பிரசாந்த் கிஷோர் பிகாரில் வியூக அமைத்து ஜெயிக்கவில்லையே?.

வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது!

காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள். பிகாரில் இருந்து வரும் ஒருத்தருக்கு அறிவு இருக்கிறது, தமிழ்நாட்டில் இருப்பவருக்கு இல்லையா. உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன்.

இந்த மண்ணில் பிறந்தவர்கள் இங்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி தெரியும்.

பிகாரில் இருந்து வந்தவருக்கு திருப்பரங்குன்றம், அத்திக்கடவு-அவிநாசி, நொய்யல் ஆறு போன்ற பிரச்னைகள் எப்படி தெரியிவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்.சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப... மேலும் பார்க்க

நாதக கொள்கை பரப்புச் செயலாளர் விலகல்!

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவ... மேலும் பார்க்க

பிப். 25-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் பிப். 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிப். 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார். சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்... மேலும் பார்க்க

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு ஏப். 15 வரை தடை!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 ... மேலும் பார்க்க