பிக் பாஸ் 8: 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், இனி போட்டியில் தொடரத் தகுதியற்றவர்கள் எனக் கருதும் இரு போட்டியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதில் அதிக நபர்களால் தேர்வு செய்யப்பட்டவர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுவர்.
அந்தவகையில் இந்த வாரத்தில் அன்ஷிதா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெஃப்ரி, ராணவ், மஞ்சரி, பவித்ரா ஜனனி என 7 போட்டியாளர்கள் இந்த வாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
7 பேர் தேர்வு
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தின் முடிவில் ரஞ்சித் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் நாள் இன்று தொடங்கியுள்ளது.
பிக் பாஸ் வீட்டின் 74வது நாளான இன்று போட்டியாளர்கள் நாமினேஷனில் ஈடுபட்டனர். இதில் ஜாக்குலின் அன்ஷிதாவையும், அருண் ஜாக்குலினையும், ரயான் ஜெஃப்ரியையும், விஷால் மற்றும் அன்ஷிதா இருவரும் மஞ்சரியையும் அதேபோல தீபக், ராணவ்வையும் தேர்வு செய்தனர்.
இதன்படி அன்ஷிதா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெஃப்ரி, ராணவ், மஞ்சரி, பவித்ரா ஜனனி என 7 போட்டியாளர்கள் இந்த வாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் போட்டியில் நீடிக்க விரும்பும் போட்டியாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். குறைந்த வாக்குகளைப் பெறும் நபர், இந்த வார இறுதியில் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதால், நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் விளையாட்டும் தீவிரமடைந்து வருகிறது.
இதையும் படிக்க | இன்றுமுதல் ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் -2 தொடர்!