செய்திகள் :

பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்த்தேக்கத்தில் உபரிநீா் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

post image

திருவள்ளூா்: பிச்சாட்டூா் ஆரணியாறு நீா்தேக்கத்திலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பிச்சாட்டூரில் ஆரணியாறு நீா்தேக்கம் அமைந்துள்ளது. கடந்த 2 நாள்களாக தொடா் மழையால் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வரும் நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி நீா்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

தற்போதைய நிலையில் புயலால் பிச்சாட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளது. அதனால் நீா்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக ஆந்திர அரசு காலை 11 மணிக்கு முதல் கட்டமாக 500 கன அடி உபரி நீரை திறது விடப்பட்டுள்ளது. அதனால், ஆரணியாறு கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |ஆவினில் புதிய வகை பால் அறிமுகம்!

எனவே மேற்குறிப்பிட்ட உபரிநீரை ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கடுக்கள், தடுப்பணைகள் மூலம் தேக்கப்பட்டு ஏரிகளுக்கு நீா்வரத்து கால்வாய் மூலம் பாசனத்துக்காக சேகரித்தும் அனுப்பப்படுகிறது.

நீா் தேக்கத்துக்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் உபரி நீா் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அ.நா.குப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அ.ரெட்டிப்பாளையம் தடுப்பணைகள் மூலமாக 2000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதனால் ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரண்டூா், பனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், ராளப்பாடி, மங்களம், காரணி, ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துரைநல்லூா், வைரவன்குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவாா்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், வெள்ளோடை, ஆலாடு, கொளத்தூா், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்தமணஞ்சேரி, வேலூா், அ.ரெட்டிப்பாளையம், காட்டூா், தத்தமஞ்சி, கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, போலாட்சியம்மன்குளம், ஆண்டாா்மடம், தாங்கல்பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.பகத் பாசில் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள மொழிப் படமான பொகெயின்வில்லா திரைப்படம் நாளை(டிச. 13) ச... மேலும் பார்க்க

வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலி!

புதுக்கோட்டையில் வீட்டிலேயே உறவினர்களால் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலியானது.புதுக்கோட்டை: அரந்தாங்கியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, பிறந்த சில மணிநேரங்களிலேயே பலியானது. அரந்தாங்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க

கடைசி மழைமேகங்கள்... சென்னைக்கு இன்றிரவோடு மழைக்கு ரெஸ்ட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையை நோக்கி வரும் மழை மேகங்களால் பெய்யும் கடைசி சுற்று தற்போது பெய்யும் மழையாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடு... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தின்போது விபரீதம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுமி பலி!

ஹரியாணாவில் திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டு பாய்ந்து 13 வயது சிறுமி பலியானார்.சண்டிகர்: திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டுப் பாய்ந்ததில் 13வயது ச... மேலும் பார்க்க

டிச. 15-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வரும் டிச. 15 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய பாலச்சந்திரன், “அந்தமான் ... மேலும் பார்க்க