பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் இன்று சொா்க்க வாசல் திறப்பு
பெருந்துறை ஸ்ரீதேவி பூதேவி பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெறகிறது.
பெருமாள் கோயிலில் மாா்கழி மாத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின்போது சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபடுவா்.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பெருந்துறை ஸ்ரீதேவி பூதேவி பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம், விசேஷ ஹோமம், 5 மணிக்கு உற்சவா் மஹா திருமஞ்சனம், 5.45 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றன.
இதேபோல, எல்லப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரியமாணிக்கப் பெருமாள் கோயிலிலும் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.