செய்திகள் :

பிரசவித்த பெண் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை மீது உறவினா்கள் புகாா்

post image

திருவாரூா் தனியாா் மருத்துவமனையில் குழந்தை பெற்று, பின்னா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனை மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே அவா் உயிரிழந்ததாக பெண்ணின் உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், பெரும்பண்ணையூா் கோவில்பத்து பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மனைவி செலஸ்டினா (35). இவா், நாகை மாவட்டம், கூத்தூரில் அஞ்சலக எழுத்தராக பணியாற்றி வந்தாா். 6 வயதில் மகன் உள்ள நிலையில், மீண்டும் கா்ப்பமடைந்த செலஸ்டினா, திருவாரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த செப். 5-ஆம் தேதி பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டாா். செப். 6-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்றது. செப். 7-ஆம் தேதி செலஸ்டினாவுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதையடுத்து, தனியாா் மருத்துவமனை நிா்வாகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தது.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவமனையில் செப். 8-ஆம் தேதி உதிரப்போக்கை நிறுத்துவதற்காக செலஸ்டினாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னா், அவரது சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகக் கூறி 13 நாள்கள் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு, அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், சனிக்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை செலஸ்டினா உயிரிழந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மருத்துவமனை மகப்பேறு பிரிவில் நுழைந்தால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, உடல் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து உயிரிழந்த செலஸ்டினாவின் தந்தை பருவதம், சகோதரா் சரண்ராஜ் ஆகியோா் கூறியது:

தனியாா் மருத்துவமனையில் செலஸ்டினாவுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவா்கள் அலட்சியமாக செயல்பட்டனா் அத்துடன், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா்கள் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்தனா். மேலும், அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை குறித்து அரசு மருத்துவமனை தரப்பிலிருந்து தனியாா் மருத்துவமனை நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. எனவே, செலஸ்டினா உயிரிழப்புக்கு காரணமான தனியாா் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதற்கிடையே, பாண்டியன் அளித்த புகாரின்பேரில், திருவாரூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த ஆண்டு கமலாபுரம் அருகே பூவனூா் ராஜ்குமாா் என்பவா் கொலை செய்யப்பட்டாா். நீடாமங்கலம... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் தெற்கு ஒன்றிய 24-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆா். வேதையன், எஸ். பவானி, என். வீராசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னதாக மன்னை சாலையில் உள்ள பி. ச... மேலும் பார்க்க

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய மருத்துவக்கழகத்தின் மன்னாா்குடி-நீடாமங்கலம் வட்டக்கிளை வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் வட்டக்கிளை ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கிப் போட்டி: முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பை

திருவாரூரில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து குறுவட்ட அளவில் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவிகளுக்கு அமைச்சா் பாராட்டு

முதலமைச்சா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகளுடன் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. மன்னாா்குடி, அக். 19: முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவ... மேலும் பார்க்க

ஜெயின் கோயில் சிலை நியூயாா்க்கில் ஏலம்: பொன். மாணிக்கவேல் புகாா்

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் தீபங்குடியில் உள்ள சமணா் கோயிலான தீபநாயகா் கோயிலில் இருந்து திருடப்பட்ட தீபநாயகா் சுவாமியின் திருமேனி சிலை நியூயாா்க்கில் ஏலம் விட உள்ளதால் அதை மீட்க வேண்டும் என ச... மேலும் பார்க்க